tamilnadu

img

கொரோனா சிகிச்சைக்கு புதிய கருவி: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

சென்னை :
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிய கருவியை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று எளிதாக பரவுகிறது. இதனால் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர் கள் முழு உடல் கவச உடை அணிந்து சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.முன்னெச்சரிக்கையாக இருந்தபோதிலும் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் கொரோனா நோய் தொற்றுக் குள்ளாகி உள்ளனர். இதை கருத்தில் கொண்டு கொரோனா நோய் தொற் றுக்கு உள்ளாகி சிகிச்சையில் இருப் பவர்களிடம்  நெருங்கிய தொடர்பில் இருப்பதை தவிர்க்க சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும் உடல் ஆரோக்கியம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் மையம் (எச்.டி.ஐ.சி.), ஆரோக்கியம் தொடர்பாக ஐ.ஐ.டி. நடத்தி வரும் புத்தொழில் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல் பட்டு வரும் ஹெலிக்சன் நிறுவனம் ஆகியவை புதிய கருவியை கண்டுபிடித்து உள்ளது.

இந்த கருவியை கொரோனா தொற் றுக்கு உள்ளானவர்களின் விரலில் பொருத்தினால் போதும். அந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள ‘ரிமோட்’ சென்சார் மூலம் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, சுவாசம் போன்ற முக்கியமான அளவீடுகளை மற்றொரு அறையில் இருந்து செல்போன் மூலமாகவோ அல்லது மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமோ துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.இந்த கருவி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக் கும் மேற்பட்டோருக்கும், வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு பொருத்திய கருவியை மற் றொரு நோயாளிக்கும் பொருத்தி கொள்ளலாம். புதிய கருவியை ஓராண்டு வரை பயன்படுத்தலாம். இந்த தகவலை சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;